சென்னை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கீழ்கட்டளை பகுதியில் அரசு மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டது.