தமிழ்நாடு

திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீஸார்?

சென்னையில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட நகைகளை மீட்டு, அதனை மூன்று தனிப்படை காவலர்கள் பங்கு போட்டு கொண்ட சம்வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

அசோக்நகரில் கைது செய்யப்பட்ட பிலிப் என்ற கொள்ளையனிடம், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மை அம்பலமானது. கோடம்பாக்கம் தனிப்படை போலீசார் ராம்குமார், தியாகராஜன், சிவகொழுந்து ஆகியோர் திருட்டு நகைகள் குறித்து தம்மிடம் விசாரித்தாக காவல்துறையிடம் கொள்ளையன் கூறியுள்ளான். பின்னர், திருட்டு நகைகள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சென்று, தம்மை காட்டி அந்த நகைகளை மீட்டு, 3 காவலர்களும் பங்கு போட்டுக் கொண்டதாக கொள்ளையன் தெரிவித்துள்ளான். அதிர்ச்சி அடைந்த அசோக்நகர் போலீசார், உயர் அதிகாரிகள் கவனத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்து சென்றனர். தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி, தனிப்படை காவலர்கள் 3 பேரை அழைத்து விளக்கம் கடிதம் பெற்றுக் கொண்டுள்ளார். அந்த 3 காவலர்களிடமும் துணை ஆணையர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்களே, இது போன்ற செயலில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்