கோவை தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தபால் வாக்குப்பதிவு...
கோவை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுகள் கடந்த ஞாயிற்று கிழமை பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவை மாநகர காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு, கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் சுமார் ஆயிரத்து இருநூறு காவலர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலை 9 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சுமார் 299 பேர் வாக்களித்தனர். தேர்தல் அலுவலர் ராமன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.