தமிழ்நாடு

இன்ஜினியரால் மன உளைச்சல் அடைந்த ஒப்பந்ததாரர் தற்கொலை

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் குமுடிமூலை கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. ஒப்பந்ததாராக வேலை செய்து வரும் இவர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வேலைகளை எடுத்து செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னை ஒஎம்ஆர் சாலையில் நடந்து வரும் பணிகளுக்கான பணத்தை தராமல் சூப்பர்வைசர் ராஜ்குமார் மற்றும் இன்ஜினியர் வெங்கட் ஆகிய இருவரும் இழுத்தப்படிப்பதாகவும், வேண்டுமென்றே தன்னை பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் தனக்கு 25 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு தனது குடும்பமே கடுமையான நெருக்கடியில் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட கலைமணி, பூவாலை பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கலைமணி குமுடிமூலை பகுதியின் தி.மு.க. கிளைச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்து வருவது குறிப்பிடதக்கது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்