தொடர்ந்து கொட்டும் நீர்பனி.. கண்களுக்கு விருந்தான கொடைக்கானல் #Kodaikanal #frost #winter #thanthitv கொடைக்கானலில் தொடரும் நீர்ப்பனி – ஜொலிக்கும் பனித்துளிகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நீர்ப்பனி அதிகளவில் காணப்படுகிறது. நட்சத்திர ஏரி, கீழ்பூமி, ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகளில் படர்ந்திருந்த பனித்துளிகள், சூரிய ஒளி பட்டதும் முத்துக்கள் போல ஜொலித்தன. மேலும், சூரிய உதயத்திற்குப் பிறகு நட்சத்திர ஏரியில் நீராவி எழும் ரம்மியமான காட்சியையும் சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்