தமிழ்நாடு

மனைவி பிரிந்ததால் வேறொரு பெண்ணுடன் தொடர்பு.. தீக்குளித்தவர் ஒருவாரத்திற்கு பிறகு உயிரிழப்பு

மனைவி பிரிந்ததால் வேறொரு பெண்ணுடன் தொடர்பு.. தீக்குளித்தவர் ஒருவாரத்திற்கு பிறகு உயிரிழப்பு

தந்தி டிவி

மனைவி பிரிந்ததால் வேறொரு பெண்ணுடன் தொடர்பு.. தீக்குளித்தவர் ஒருவாரத்திற்கு பிறகு உயிரிழப்பு

திருப்பூர் அருகே உடனிருந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தீக்குளித்தப்படி வீட்டில் இருந்து ஓடி வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.பல்லடம் பெரியார் நகரில் வசித்து வந்த கட்டிட தொழிலாளியான மாணிக்கம் என்பவருக்கு மனைவி பிரிந்து சென்ற நிலையில் துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி வழக்கம் போல் துர்க்கையம்மாளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாணிக்கம் தீக்குளித்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒருவாரமாக 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை எடுத்து வந்த மாணிக்கம் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று உடல் முழுவதிலும் எரியும் தீயுடன் தனது வீட்டில் இருந்து மாணிக்கம் ஓடி வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதனிடையே, மரணிக்கும் முன்பு தன் மீது துர்க்கையம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக மாணிக்கம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்