நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 5 மற்றும் 6ம் அணு உலைகளின் அடித்தளத்திற்கான கான்கிரீட் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மற்றும் 6ம் அணு உலைகள், 49 ஆயிரத்து 621 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், இதற்கான கான்கிரீட் அமைக்கும் பணியின் பூமி பூஜையில், இந்திய அணுசக்தி துறை தலைவர் கே.என்.வியாஸ், ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழக இயக்குனர் அலெக்சி லிக்காசெவி உள்ளிட்டோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.