தமிழ்நாடு

சதாஃப் ஜப்பார், தாராபூரி ஆகியோரை கைது செய்தது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியதாக கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்துள்ள நிலையில் ப. சிதம்பரம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

உத்தரபிரதேச போலீசார் கைது செய்த காங்கிரஸ் கட்சியின் சதாஃப் ஜப்பார், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபூரி, பவன்ராவ் அம்பேத்கர் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், எவ்வித கலவரத்திலும் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை என போலீசார் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவர்களை ஜாமினில் விடுவித்தது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ஆதாரம் இல்லாமல் கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். அவர்களை நீதிமன்றம் ரிமான்ட் செய்தது, ஆதாரம் இல்லாமல், காவலில் வைக்க உத்தரவிட்டது எப்படி என சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஆதாரத்தை பார்த்து கைது செய்ய சட்டம் சொல்கிறது என்றும், ஆனால், நடைமுறையில் அதை செய்யாதது வெட்கப்பட வேண்டியது என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்