திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடமிருந்து குறைகள் அடங்கிய மனுக்களை எம்.பி. திருநாவுக்கரசர் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் பற்றி ஸ்டாலின் கூறியதற்கு முதலமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, அவதூறு வழக்கு தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது என்றார்.