குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்த ஜெயராம், மாரடைப்பால் காரணமாக இறந்துள்ளார். வேலூர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் உயிருடன் இருக்கும் போதே தான் உயிரிழந்த பிறகு தனது உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜெயராம் முதலியாருக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டது. அவரது கண்கள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள மருத்துவமனைக்கு தானமாக எடுத்துச் செல்லப்பட்டது.