தமிழ்நாடு

முன்விரோதத்தால் மூண்ட மோதல் - பலியான உயிர்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழிந்த‌ நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அஜய் என்பவரை, முன்விரோதம் காரணமாக பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் தாக்கியுள்ளனர். இதையறிந்த அஜய்யின் உறவினர்கள், பூமிதாதன் வீட்டுக்கு சென்று தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில், 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாஸ்கர் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 6 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்