பள்ளி மாணவர்களுக்குள் நடந்த மோதல் - சாதி பிரச்சினையே காரணம் என தகவல்
நெல்லையில் பள்ளி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.