தமிழ்நாடு

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார்: சிதறிக் கிடந்த ரூ. 2.78 லட்சம் பறிமுதல்

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
நாங்குநேரி தொகுதியில் உள்ள அம்பலம் கிராமத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தப் பகுதி இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருவர் தப்பியதாகவும், அவர்களை துரத்தும் போது, ஒரு வீட்டில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டில் வாக்குக்கு பணப் பட்டுவாடா செய்ததாக வந்த தகவலின் பேரில் வந்த போலீசார், வீட்டின் முன்பு சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, அந்த வீட்டில் தங்கி இருந்த பெரியகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் உள்ளிட்டோரை போலீசாரிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர். ஆனால், தேர்தல் பணி செய்துவிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வீடு புகுந்து தாக்கியதாக எம்.எல்.ஏ. சரவணகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்