தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் என்பவர் அளித்த புகாரில் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 கல்லூரிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடாததால், இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, போலி சான்றிதழ்களை கொடுத்து பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்ததாக கூறி 2 பேராசிரியர்களின் விவரங்களை வெளியிட்டது குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இதே அமைப்பு மற்றொரு புகாரை அளித்துள்ளது.

அண்ணா பல்கலை பதிவாளர் குமார் விளக்கம்

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் எவ்வித உண்மையும் இல்லை என்று அண்ணா பல்கலை பதிவாளர் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி