தமிழ்நாடு

மணப்பாறை, திருச்சி ||மணப்பாறை அருகே கார் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு கார் கடத்தல் என புகார்

மணப்பாறை அருகே கார் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு கார் கடத்தல் என புகார்

thanthitv

மணப்பாறை அருகே வாடகை கார் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு, காரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் மோகன் என்பவரிடம், 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் மணப்பாறை செல்ல வேண்டும் என காரை வாடகைக்கு எடுத்துள்ளனர் . இந்நிலையில், திருச்சி, மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளிபட்டி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அப்போது கார் ஓட்டுநர் மோகனை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மோகனை வாகன ஓட்டிகள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

TVK vs DMK | இன்னும் 16 மணி நேரத்தில் தேர்தல்.. சற்றுமுன் திமுக பரந்தாமனுக்கு தவெக கொடுத்த அதிர்ச்சி

TVK Ministers | DMK | "அமைச்சர்கள் குறித்து திமுக வழக்கு தொடரலாம்.." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Trichy | குத்துவிளக்கு சிக்கல்? - அமைச்சர் சொல்ல சொல்ல காங்கிரஸ் MP-யிடம் வாக்குவாதம் செய்த தவெக MLA

Karuppu Murugandham Issue| ``என்னை ஹனிடிராப் செஞ்சுட்டாங்க’’ - கைதாகிறாரா கருப்பு முருகானந்தம்

Chennai Rain | சுமார் 1 மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழை - போக்குவரத்து பாதிப்பு.. மக்கள் அவதி