சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மலை குறவர், மற்றும் இருளர்கள், சாதி சான்றிதழ் வழங்க கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பான கோரிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வைக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வம், மலை குறவர், மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 100 பேருக்கு சாதி சான்றிதழை வழங்கினார். இது தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.