தமிழ்நாடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை - வெளியான தரவரிசைப் பட்டியல்

தந்தி டிவி

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 1 லட்சத்துக்கு 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த 5ம் தேதி தொடங்கி கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 58,527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு, மே 28 முதல் ஜூன் 29-ம் தேதி வரை இருகட்டங்களாக மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்