முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் இந்த ஆண்டே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்துல்கலாம் நினைவிடம் அருகிலேயே அமைய உள்ள இந்த கல்லூரிக்கு, இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, வகுப்புகள் தொடங்கப்படும் என, கல்லூரிக் கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.