தமிழ்நாடு

பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை

கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நெய்வேலி குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. கடலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த அவரைக் குறித்து தவறான தகவலை, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்களும், கிராமத்தினரும் பிரேம்குமார் வீட்டை அடித்து நொறுக்கியுள்ள நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது அத்தை மகன் விக்னேஷ், ராதிகா இறந்த செய்தி கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, விக்னேஷின் தந்தையும், ராதிகாவின் தந்தையும் தனித்தனி புகாரை மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவான பிரேம்குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், ராதிகா மரணத்திற்கு நியாயம் கேட்டும் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், ராதிகா மற்றும் விக்னேஷ் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் குறவன்குப்பம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு