தமிழ்நாடு

கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து கொலை : நண்பர்கள் 3 பேர் கைது

கும்பகோணம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக சக நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு மும்தசரின் தாயை மிரட்டியுள்ளனர். இதையடுத்து, மும்தசரை போலீசார் தேடிவந்த நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றிற்கு செல்லும் வழியில் மும்தசர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு புதரில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, மும்தசரை கொலை செய்ததாக அவரது சக நண்பர்களான நியாஸ் அகமது, முகமது கலீல் மற்றும் சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காதல் பிரச்சினையால் இக்கொலை நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்