மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கைது செய்யக் கோரி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்செல்வன். இவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆபாசமான எஸ்எம்எஸ்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிமாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடந்த பிறகு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.