மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன். இவர் விருதுநகரில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அவர் மேல் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பலியானார். கிராமப்புறங்களில் மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.