அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21 ஆம் நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஆன்-லைன் மூலம் இன்று முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான இணையதள முகவரியை வெளியிட்டார்.