குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.விபத்துக்குள்ளான அன்று நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்க தங்கள் வீடுகளில் இருந்த கம்பளிகள் உடமைகளை கொடுத்து மீட்புப் பணிக்கு உதவிகளை செய்தனர். இதையடுத்து நேற்றைய தினம் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கம்பளிகளை ராணுவத்தினர் வழங்கிய நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்