ஓசூர் அருகே சமத்துவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நாணய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இந்தியா, அல்கேரியா, எத்தோப்பியா, கானா மொராக்கோ, சிம்பாவே, சீனா, இஸ்ரேல், கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, துருக்கி, ஏமன், பிஜி, நியூசிலாந்து, சுவீடன், இந்தோனேசியா, பக்ரைன், உள்ளிட்ட ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள 100 நாடுகளில் இருந்து மாணவர்கள் சேகரித்திருந்த பழமையான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இவைகளை கண்டு, அப்பகுதி மக்கள் வியப்பு தெரிவித்தனர்.