கோவையில் வாங்கிய இரண்டு நாட்களிலேயே கோளாறான செல்போனால், தனியார் செல்போன் ஷோரூமில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஷோரூமில், தினகரன் என்பவர் ஆன்ட்ராய்ட் போன் வாங்கியுள்ளார். போனை வாங்கிய இரண்டு நாட்களிலேயே டிஸ்ப்ளேயில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 9 நாட்களுக்குப்பின், தினகரன் செல்போனை ஷோரூமிற்கு கொண்டு சென்றுள்ளார். ஷோரூம் ஊழியர்கள் ஒரு வாரத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே புதிய போன் வழங்கமுடியும். இப்போது போனை சர்வீஸ்தான் செய்து தர முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.