தமிழ்நாடு

பரபரப்பான கோவை காந்திபுரத்தில் நடுரோட்டில் சிலையாக மாறிய நபர்..இது மனிதனா.. ரோபோவா? மிரண்ட மக்கள்!

தந்தி டிவி

பரபரப்பான கோவை காந்திபுரத்தில்

நடுரோட்டில் சிலையாக மாறிய நபர்

இது மனிதனா.. ரோபோவா? மிரண்ட மக்கள்!

கோவை காந்திபுரத்தில் பஸ்ஸுக்கு முன்பாக ரோபோ போல் போஸ் கொடுத்து இம்சை செய்த இளைஞரால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்...

தானும் நகராமல், முன்னிருக்கும் பேருந்தையும் நகர விடாமல் தன்னை சிட்டி ரோபோ போல பாவித்து கொண்ட ஆசாமி ஒருவர் செய்த அட்ராசிட்டி தான் இது...

பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் தான் இப்படி வித்தை காட்டியுள்ளார் இந்த ஆசாமி...

செய்யும் சேட்டையை பார்த்து மது போதையில் தான் இருக்கிறார் என நினைத்து விடவேண்டாம்... அப்பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலின் படி அவர் மது போதையில் இல்லை என கூறப்படுகிறது...

ரோபோ போல் மெல்ல மெல்ல அசைந்து நிற்க, முன்னிருக்கும் பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்..

திடீரென ரோபோவை போல் நடக்கும் இந்த ஆசாமி, திடீரென அப்படியே சிலையாக மாற...அங்கிருந்தவர்கள் கடுப்பாகி போயினர்...

அதிலும் தன்னை ஹீரோவாக நினைத்துக் கொண்டு பாக்கெட்டில் கை வைத்தப்படி கொடுத்த போஸ்-ஐ கண்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்...

சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் பதிவிட இப்படி செய்தாரா அல்லது ஃபேமஸ் ஆக வேண்டும் என இப்படி செய்தாரா என மக்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதே வேளையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே அட்ராசிட்டி செய்தவரால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்..

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி