கோவையில் அமைய உள்ள கொடிசியா தொழிற் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தென் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் கண்காட்சி இடமாக கொடிசியா செயல்பட்டு வருவதாக கூறினார். சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய தொழில் நகரமாக கோவை விளங்குவதாக முதலமைச்சர் தெரிவித்தார். கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.