தமிழ்நாடு

கோவையில் புதுமைப் பள்ளி விருது பெற்ற அரசுப் பள்ளி

கோவை மாவட்டம், காளப்பட்டி நேருநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு, புதுமைப் பள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் சிறப்பாக இயங்கிவரும் 56 அரசுப் பள்ளிகள் புதுமை பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கோவை காளப்பட்டி, நேருநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு, புதுமை பள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.

கற்பித்தல் முறை, கட்டமைப்பு வசதி, மாணவர்களின் தனித் திறன், போட்டிகள் என பல ஆய்வுகளுக்கு பின்னரே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியை சீதாலட்சுமி, கடந்த 2016-17 ஆம் கல்வி ஆண்டிலும், தங்களது பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். தற்போதும் புதுமைப்பள்ளி விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், அதற்காக, சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்