தமிழ்நாடு

சாக்கடையில் கிடந்த 5 மாத கரு - போலீஸ் தீவிர விசாரணை

கோவையில் ஐந்து மாதங்களே ஆன குழந்தை கரு ஒன்று சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

இன்று காலை, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடையில், முழுவதும் வளர்ச்சிப் பெறாத குழந்தை கரு ஒன்று கிடந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர், அந்த கருவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருவை பரிசோதித்த மருத்துவர்கள், அது உருவாகி ஐந்து மாதம் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

சாக்கடையில் அந்த கருவை வீசியது யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்