தமிழ்நாடு

தொடர்ந்து குறைந்து வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்

கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் நான்கு அடிக்கும் கீழ் சென்றதால்,10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் நான்கு அடிக்கும் கீழ் சென்றதால்,10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிறுவாணி அணையில் இருந்து கோவை மாவட்ட மக்களுக்கு தினமும் 4 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி என்ற நிலையில் அது தற்போது 4 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு பருவமழை தான் தீர்வாக இருக்க முடியும் என கூறும் அதிகாரிகள், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு