தமிழ்நாடு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாய் மனு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவரது தாயார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளார்.

தந்தி டிவி

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த மார்ச் 25-ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். பின்னர் சிறுமியின் உடல் வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி கோரி சிறுமியின் தாயார் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தடவியல் துறை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை