தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை : குடும்பத்தினருக்கும் விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் என்பவர் தமது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் அந்தோணி ஆரோக்கியதாஸ். இவர் கடந்த சில தினங்களாக கடும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த அந்தோணி, தமது குடும்பத்தினரை விட்டு பிரிய மனமில்லாமல் மனைவி ஷோபனா, தாய் புவனேஸ்வரி, மற்றும் இரு குழந்தைகள் ரித்திக், ரியா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தோணி இறப்பதற்கு முன், எழுதியிருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் 5 பேர் உயிரிழந்தது அப்பகுதிவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு