கோவை, முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் விவகாரத்தில், மாற்று இடம் வழங்காதவர்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முத்தண்ணன் குளக்கரையில் அமைந்துள்ள வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, மாநகராட்சி நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் மாற்று இடம் வழங்காதவர்களின் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இது தொடர்பாக வரும் 10ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி மொழி அளித்த பின்னரே, இந்த போராட்டம் கைவிடப்பட்டது.