தனியார் பள்ளி வாகனம் மோதி , 5 வயது சஸ்வந்த் என்ற சிறுவன் நிகழ்விடத்தில் பலியானான். இந்த துயர சம்பவம், கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் என்ற இடத்தில் நிகழ்ந்தது. வீட்டுக்கு முன், விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுவன் மீது வேன் ஏறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.