தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம் : முக்கிய குற்றவாளி யார்?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறியும் பேஸ்புக் மூலம் பழகிய பெண்களை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறியும் பேஸ்புக் மூலம் பழகிய பெண்களை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம்

செய்துள்ளது.

அப்போது வீடியோ எடுத்து அப்பெண்களை மிரட்டி அந்த கும்பல் பணம் பறித்தும் வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட

ஒரு கல்லூரி மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான முக்கிய நபரான திருநாவுக்கரசையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட கும்பல் பெண்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு இல்லை என கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்,

இதற்கிடையே பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே நாகராஜ் மீது அதிமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. கட்சி கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திங்களன்று இரவு டிஜிபி அலுவலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இந்த நிலையில் தன் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை இனி யாருக்கும் நேரக்கூடாது என்பதற்காகதான் போலீசில் புகார் அளித்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. அப்போது மேலும் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’