தமிழ்நாடு

கோவையை அதிரவிட்ட நகைக்கடை கொள்ளையனின் தந்தை வாக்குமூலம் அளித்துவிட்டு உயிரை விட்டதால் பரபரப்பு

தந்தி டிவி

கோவையில் உள்ள பிரபல நகைக் கடையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி 200 சவரனுக்கு மேலான நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் தேவரெட்டியூரை சேர்ந்த விஜய் என்பதும், திருடிய நகைகளை அவர் தும்பல்ஹள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டில் பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. நகைகளை தொடர்ந்து பறிமுதல் செய்து, இளைஞரை தேடி வரும் போலீசார், விஜயின் தந்தையான முனிரத்தினத்தை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் கழிவறையில் 38 கிராம் தங்க நகைகள் மற்றும் இரண்டு செல்போன்கள் இருந்ததாக கூறி காவல்துறையினரிடம் முனிரத்தினம் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து, விசாரணை முடிந்து வீடு திரும்பிய முனிரத்தினம், அன்றிரவு மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்