கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், துப்பாக்கியால் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தங்கள் தோட்டத்திற்குள் யானை புக முயன்றதால் சுட்டுக் கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனிடையே, சிறுமுகை வனப்பகுதியில், உடல்நலக்குறைவால் பெண் யானை ஒன்று உயிரிழந்தது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளன.