தமிழ்நாடு

கலெக்டர் ஆஃபீஸை பதற்றமாக்கிய குடும்பம்.. தாயின் கண்ணீரை பார்த்து கதறிய மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவன்

தந்தி டிவி

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரியான குணசேகரனுக்கு ஒரு மகளும், மன நலன் குன்றிய மகனும் உள்ள நிலையில் அவரது மகள் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்... கடந்த 7ம் தேதி சுற்றுலா சென்று வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்ட அவர் காதலனுடன் கடந்த மாதம் 18ம் தேதி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்... உடன் வர மகள் சம்மதிக்காததால் பெற்றோர் கவலையுடன் வீடு திரும்பினர். 4 பவுன் தங்க நகை, 6 லட்ச ரூபாய் பணத்தை மகள் எடுத்து சென்று விட்ட நிலையில் தன் மகனுக்கு சிகிச்சை அளிக முடியவில்லை என்றும், அதை மீட்டுத் தரக்கோரியும் குணசேகரன் தன் மனைவி, மன நலன் குன்றிய மகனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்... மன நலன் பாதிக்கப்பட்ட சிறுவன் தன் தந்தையை காவலர்கள் தாக்குவதாக நினைத்து கத்தி அழுதது பரிதாபமாக இருந்தது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி