வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும், அரசு காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். கைதான போராட்டக்காரர்கள், தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.