குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். கோவை மாவட்ட புறநகர்ப் பகுதியான கண்ணமாபாளையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் கையில் தீபந்தங்களை ஏந்தி பேரணியாக சென்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும், தேசிய குடியுரிமை பதிவேடு செயல் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.