தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - சந்தோஷ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவை பன்னிமடையில் ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி

கடந்த மார்ச் மாதம் பன்னிமடையில் ஏழு வயது சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்தது. கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என போக்சோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான மரபணு பரிசோதனையில் மற்றொரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அந்த நபரை கைது செய்ய வேண்டும் எனவும் சிறுமியின் தாயார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்