தமிழ்நாடு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுத்த இளைஞருக்கு அடி உதை

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர்.

தந்தி டிவி

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர். 68 வயதான சுசீலா என்பவர் நடைபயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து, செயினை அறுத்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சுசீலா, அந்த இளைஞரை பிடித்துக் கொண்டு சத்தமிட்டதால், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, இளைஞரை மடக்கிப் பிடித்து, கட்டி வைத்து உதைத்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து நகையை மீட்டு திருடனை பிடித்துச் சென்றனர். விசாரணையில், அந்த இளைஞர், திருப்பூரைச் சேர்ந்த அம்சா என தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்