தமிழ்நாடு

காரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : திருப்பதியில் தாய் - மகன் கைது

கோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7ஆம் தேதி தமிழகம் - கேரள எல்லையில் காரில் கொண்டு செல்லப்பட்ட பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 98 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சமா, அகமது சலீம் என்பதும், கோவை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. நகைகளை வீட்டில் வைக்க பயந்து திருப்பதிக்கு சென்ற நிலையில் போலீசிடம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்