கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காந்திபுரத்தில், இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் காணொலி மூலம் இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, அமைச்சர் வேலுமணி, மக்கள் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து, போக்குவரத்தை துவக்கி வைத்தார்.