அதிமுகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய இருந்த நபரை அக்கட்சியின் முன்னாள் மாநகர கவுன்சிலர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஸ்ரீ ராமுலு கடந்த ஓராண்டாக அதிமுகவில் இருந்து விலகி இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சுன் என்பவர், ஸ்ரீராமுலுவை கடத்தி சென்று தாக்கியதாக தெரிகிறது. அதுதொடர்பான சிசிடிவி பதிவுகளும் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த ஸ்ரீ ராமுலு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.