தமிழ்நாடு

மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து - இளைஞர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இந்திரஜித் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஆனைக்கட்டி செல்வதற்காக காரில் பயணித்தார். அப்போது கணுவாய் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் உருக்குலைந்து போனது. இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய இளைஞர்களில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி