தமிழ்நாடு

CM Vijay Birthday | TVK | CM விஜய் பிறந்த தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெகவினர்

CM விஜய் பிறந்த தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெகவினர்

thanthitv

CM விஜய் பிறந்த தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெகவினர் தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, வத்தலக்குண்டுவில் தவெக நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.... திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அய்யனாரின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மத்திய மாவட்ட தவெக பொருளாளர் மகாராஜா தலைமையில், முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.... முன்னதாக வத்தலகுண்டு காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.. தொடர்ந்து பிறந்தநாள் விழாவில் 500 பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது... மேலும், பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதேபோல், பரசுராமபுரத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.... விழாவிற்கு தவெக நிர்வாகிகள் லியோ ஜான், கருப்பண்ணசாமி, சகாதேவன், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவெக நிர்வாகிகள் கணேசன், கவாஸ்கர், விக்னேஷ், கோபிசங்கர், ரமேஷ் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்