தமிழ்நாடு

நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம்

நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தந்தி டிவி
தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில், பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் எஸ். கே. பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர், இருதுறைகளின் தலைமை பொறியாளர்கள் உள்பட 50 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இரு துறை சார்பில், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை, அந்த பணிகள் எப்போது முடிவடையும் என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எந்தெந்த மாவட்டங்களில் புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டி இருக்கிறது, கொள்கை விளக்க குறிப்புகளை இறுதி செய்வது என்பன உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்