தமிழ்நாடு

குப்பையில் இருந்த அசிங்கம்... வேதனையில் தூய்மை பணியாளர்கள் செய்த செயல்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெரியார் நகர் பகுதியில், மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து சேகரிக்கும் பணியில் இரண்டு பெண் தூய்மை பணியாளர்கள் நேற்று ஈடுப்பட்டிருந்தனர். அப்போது மனித கழிவுகளை மக்கும் குப்பையில் ஒரு வீட்டில் உள்ளவர்கள் கொட்டியுள்ளனர். அதை பிரித்து எடுக்கும் போது அவர்கள் கைகளில் மனித கழிவுகள் பட்டுள்ளது. இது குறித்து அந்த குடியிருப்பில் உள்ளவர்களிடம் கேட்ட போது, அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி இருவரும் தூய்மை பணியாளர்களை தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து, ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்